தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன் தினம் சனியன்று
மதியம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசைப்படகு ஒன்றின் மீது இலங்கைக்
கடற்படையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தியதாகப் புகார் கூறி பிரதமர்
மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
தனுஷ்கோடி அருகே இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்
பிடித்துக்கொண்டிருந்தபோது எவ்வித எச்சரிக்கையுமின்றி திடீரென்று அங்கு
வந்த இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக அப்படகின் மீது சுட்டதாகவும்,
அதிலிருந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த ஆறு பேரில் எவரும் காயமடையவில்லை
என்றாலும் படகு பாதிக்கப்பட்டதாகவும் முதல்வர் கூறுகிறார்.
''தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இவ்வாறு
இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்திவருகிறது, இந்திய கடற்படையைக் கண்டோ
கடலோரக் காவற்படையைக் கண்டோ இலங்கை அஞ்சுவதாகத் தெரியவில்லை. தமிழக
மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நிற்கவில்லை'' என்கிறார் ஜெயலலிதா.
ஏற்கனவே தமிழக மீனவர்கள் 75 பேர் சிறை பிடிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய 35 படகுகள் இலங்கையால் கைபற்றப்பட்டிருக்கின்றன.
'இவ்வாறு அண்மைக்காலங்களில் தமிழக மீனவர்கள் மீதான
தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன, இப்போக்கினை மத்திய அரசு கடுமையாக
கண்டிக்கவேண்டும், தவிரவும் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில்
தமிழ்நாட்டு மீனவர்கள் தடையின்றி மீன் பிடிக்க மத்திய அரசு ஆவன
செய்யவேண்டும், அவர்களது வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படவேண்டும்'' எனவும்
ஜெயலலிதா தனது கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார்
No comments:
Post a Comment