Sunday, September 22, 2013

மன்னார் வளைகுடா : அதிகரிக்கும் டால்பின், கடல் பசு உயிரிழப்பு

ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில், பவளப்பாறை மற்றும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் அதிகமாக வாழ்கின்றன. நடப்பாண்டு கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் பசு, டால்பின், திமிங்கலம் உள்ளிட்ட உயிரினங்கள் அடிக்கடி உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாறைகள் மீது மோதியும், மீனவர்களின் வலைகளில் சிக்கியும் உயிரிழக்கின்றன.

இது குறித்து மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின அதிகாரி ஒருவர்,  ‘’நடப்பாண்டில் இதுவரை 3 டால்பின்கள், கடல் பசுக்கள், ஒரு திமிங்கலம் பலியாகி உள்ளன. சில வாரங்களுக்கு முன், தனுஷ்கோடி அருகே கடல் பன்றி ஒன்றும் இறந்து கரை ஒதுங்கியது. வரும் காலங்களில், மீனவ கிராமங்களில், இதுபோன்ற உயிரினங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்’’ என்றார்.

No comments:

Post a Comment